இலக்கணக் காதல்

தோட்டத்தில் மலர்ந்த
மலர்களில் செங்காந்தள் -நீ
கண்களில் வார்த்த காதல்
கைப்படா கானல் நீராய் .............
உமது இதழ் பேசும் வார்த்தைகள்
பொருளில்லா இரட்டைக் கிளவியாய்
காதலின் அறிகுறிகள் அடுக்குத்தொடராய்
எமக்கு அணி சேர்த்தாலும்
அனுமதி மறுத்த வார்த்தைகள்
உள்ளத்தினுள் வாட்டம்
ஒருபொருள்பன்மொழியாய்
எமது காதலை
எத்தனை முறை இசைத்தாலும்
ஒன்றோழிப்பொதுச் சொல்லாயாய்
காதலை மறைத்து
நட்பென்னும் நங்கூரமிட்டாய்
போர்வன்முறை கொண்ட புறத்திணை வேண்டாம்
அன்பை நாடும் ,அகிம்சை பேணும்
அகத்திணை போதும்
குறிப்புச்சொல்லால் உள்ளதை குத்தாதே
இனகுறிச்சொல்லைக் கையாண்டு
காதல் இசைவு மறுக்காதே
வெளிப்படைச்சொல்லால்
எமது காதலை வெளிச்சமாக்கு
பெருந்திணை என்றெண்ணி
கைக்கிளையாய் தனிமை படுத்தி விடாதே
என்னுடையக்காதலை ................




இளையகவி

எழுதியவர் : இளையராஜா. பரமக்குடி (5-Apr-13, 1:33 pm)
பார்வை : 154

மேலே