இலங்கை கொடுமை
சொல்ல முடியாத துயரங்கள் ,
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் ,
ஆறுதல் இல்லாத வருத்தங்கள் ,
காண முடியாத கொடுமைகள் ,
கற்பனைக்கும் எட்டாத காட்சிகள் !
நரகம் என்றால் என்ன என்பதை
இறக்கும் முன்னே இங்கே கண்டவர்கள்
துடிக்கும் உயிர்களின் காட்சிகள் பார்த்து
அழுது புலம்பிய காலம் கொடுமை !
கண்ணீர் உண்டு தண்ணீர் இல்லை ,
சிதறி தொலைந்தது உறவுகள் கூட்டம் ,
காற்றில் பறந்தது பெண்களின் மானம் ,
அலைந்து அழிந்தது தமிழர் கூட்டம் !
சுவாச காற்றெல்லாம் பிணவாடை ,
பதுங்கு குழியெல்லாம் பிணக்குழி ,
திரும்பும் இடம் எல்லாம் மரண ஓலம் ,
மடிந்து போனது அங்கே தமிழர் குளம் !
தாயின் முன்னே மகன் இறக்கிறான்
மகனின் முன்னே தந்தை இறக்கிறான்
பெற்ற குழந்தையின் பிணத்தை தூக்கி
தாய்கள் சுற்றித் திரிந்த கொடுமையும் உண்டு !
கசாப்பு கத்தியால் காலுக்கு சிகிச்சை
மயக்கம் இல்லாத அறுவை சிகிச்சை
கதற கதற மருத்துவ சேவை
எங்கும் கானா கொடுமை இதுவே !
ஓடி ஒளிந்தும் குண்டு துளைக்க
ஒய்வு என்பதை உடம்பு மறக்க
உயிரை காக்க ஓடி சேர்ந்தார்
ஒவ்வொருநாளும் தமிழர்கள் !
ஒன்றும் அறியா இளம் கன்றுகள்
ஓடி விளையாடிய காலங்கள் மாறி
ஓடி ஒளிந்து உயிரை மாய்த்து
கல்விக்கூடம் போகவேண்டியவர்கள்
கல்லறைகூடம் போனது கொடுமை !
மனமேடை கனவில் இருந்த மங்கைகள்
பினமேடை ஏறிய கொடுமையும் உண்டு
குப்பையை போல குழிக்குள் கொட்டி
அடக்கம் செய்த மக்கள் உடல்கள் !
அதிகாரம் செய்ய வேண்டியவர்கள்
அகதிகளாய் போய்விட்டார்கள்
வீட்டையும் நாட்டையும் வெறுத்து விட்டு
எங்கோ போனார்கள் அடைக்கலம் தேடி !
அரக்கர்கள் ஆட்சிதான் அங்கே நடக்குது
அடிமைத்தனம் செய்து காலம் ஓட்டுது
நடுநிலை ஆட்சி அங்கே தேவை
தமிழர்கள் வாழ் வாய்ப்பு தேவை !
அங்கே மனித உரிமைகள் இல்லை
மனிதாபிமானமும் இல்லை
இறக்கம் இல்லாத மிருகங்கள்
ஆளும் இலங்கை நாட்டை மீட்டெடுப்போம்
மீண்டும் தமிழர்களை வாழவைப்போம் !