வாழ்ந்துதுதான் பார்ப்போமே ,,,!!!

வாழ்ந்துதுதான் பார்ப்போமே ,,,!!!

கடற்கரையொதுங்கிய
கல்லிலே இருந்தபடி
கடல் காற்றை
சுவாசித்து சிந்திக்கையில்
சிறு சிறு ஏமாற்றங்களும்
சிரிப்பை தந்துவிடாதா

வெள்ளையுள்ளங்கள்
தஞ்சம்கொண்ட
பிஞ்சுமுகங்களின்
புன்னகைக் கைய்யசைப்புகள்
கவலைகளை மறக்கடித்துவிடாதா,,,

கைத்தவறிய குடைதனை
மழைக்காற்றிலே துரத்தியபடி
உடையொட்டிய அழகிலே
இளம்பெண்ணின் தவிப்புகள்
காணுகின்ற நெஞ்சங்களை
வருடியப்படி திருடிச்செல்லாதா,,,

இளங்கன்று துள்ளல்களின்
இதமான இளம்பார்வை
இளகுகின்ற காளைமனம்
பிடித்துவிட்ட அச்சாணி
வாழ்க்கையெனும் சக்கரமும்
சுகமாக சுழன்றுவிடாதா

எடுத்துவைத்த ஞாபகத்தை
மடித்துவைத்த எஜமானி
நோட்டமிடும் நடைமறந்து
போன இடம் கல்யாண விருந்து

அறியாத கேளீரும்
அடித்து பிடித்த உபசரிப்பு
ஆறியப்பின்னரே
அகத்தோடு சிறு சஞ்சலப்பு
வந்த இடம் தவறிவிட
எதோ ஒரு படபடப்பு
தனித்துநின்று நினைத்துவிட்டால்
தனைமறந்து வாய்ப்பிளக்காதா,,,,,,!!!

நிறைய கடந்துவிட்டோம்
எதையோ தேடி ஏன்
தொலைக்கவேண்டும் வாழ்க்கையை

இந்த வாழ்க்கை அழகாக இல்லையா
திருப்தியாக இல்லையா

தேடித்தொலைக்கும் தருணங்களில்
வாழ்ந்துதான் பார்ப்போமே

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (7-Apr-13, 12:34 pm)
பார்வை : 228

மேலே