லயம்

எனக்கான கடை நாள் வலிகளை
கண்ணீருடன் விவரிக்கிறேன்.
நித்தியமானவனுக்கு நித்தம் வலி ஏனோ
என்று விரல் பிடித்து
தலையினைக் கோதி
முத்தம் பதிக்கிறாய்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
கிழம் பாயில படுத்து
அழுது அழுது
உயிரை எடுக்குது.
போய் சேர்ந்தாலும் நிம்மதியா இருப்பேன்.
தூரத்தில் நாய்களின் அழுகை ஒலி.