யுகம் துறப்பது எளிதடி எனக்கு
முகில்கள் மலையின்பால்
மோகம் கொண்டனபோல்..
தென்றலுடன் இசைந்து !
தேன்மொழி பகர்ந்து..
தங்கச்சிலை உயிர்பெற்றதுபோல்
தயக்கமாய்..
அன்னநடை பயின்று !
ஆரவாரமின்றி
நிலம்தாங்கும் நிலமகளாய்
நிதானமாய்
அடிவைத்து நுழைந்தாள் !
கல்விச்சாலையிலே
மிதியடியாய்..
சிகப்புகம்பளம் போர்தாற்போல்
மலர்தூவி
இருமருங்கிலும்
தலைநிமிர்ந்து நிற்கும்
மரங்கள்தாம் சேவகர்கள்
என் தேவதைக்கு !
மலர்களையே..
அனுமதியின்றி வருடியதால்
பாதரட்சையால்
பதம்பார்தவள்..
அவள் !
அவள் கூந்தல்
தென்றலுடன் இசைபாடும் !
வெட்டி எறிந்த நகங்கள்..
ஜென்மப்பலனை பெற்றத்திருப்தியில்
ததி கிந தோம் ஆடும் !
ஈராராயிரம்
ஆண்டுகள் வேண்டும்..
அவள்
இதழ்களின் இன்பத்தில்
திளைத்து எழ !
சங்கீதத்திற்கென சரத்துக்கள்
வைத்திருபோரே !
என்னவள் குரலினையும்
சற்றே செவிமடுங்கள்
இல்லையேல்..
காணாமல் போகும்
என் மனதைபோல்
உங்கள் சங்கீதமும் !
அங்கங்கள் அனைத்திற்கும்
சங்கங்கள் அமைத்தால்
அனைத்திற்கும்
தலைவியாய் வீற்றிப்பவளே !
ஏன் ?!
இந்த அற்பத்தனம்..!
என் இதயம் களவாடியதன்
நோக்கம் தான் என்ன ?
அங்கங்களை ஆராதனை செய்த
எனக்கு..
ஆட்கொல்லி விழிதனை
அகம்பார்க்க முடியவில்லையே ஏன் ?
உள்ளம் கவர்ந்தவளே..
ஊருணியில் மிதக்கும்முன்
ஊரார்க்கு அறிவித்துவிடு..!
இல்லையேல்..
உள்ளத்தை தந்துவிட்டுப்போ !
பின்னுரைத்தது எளிதெனில்
இந்த யுகம் துறப்பது
எளிதடி எனக்கு..!
- மகா