நதியாய் உறவாடமறுக்கிறாய்

ஒற்றையடி பாதையில்
உனக்கென சாய்ந்திருக்கும்
ஒற்றைப்பனைமரம்
அழகு !

நொங்குவண்டி பூட்டி
உனை முந்திச்செல்லும்
சிறுவர் சிறுமியர்
அழகு !

அன்னநடை பயிலுகையில்
அதிரும் பூமி
அழகு !

மயில்வண்ண பாவாடையில்
உன் வெள்ளைதாவணி
அழகு !

என் சொல்லுக்கு எதிராய்
போர்தொடுக்கும்
உன் காதணிமணிகள்
அழகு !

முகம்மூடும் கூந்தல்
கோதும் விரல்கள்..
அழகு !

நிலம் நோக்கி
முகம் நோக்கும்
கருவிழிமலர்கள்
அழகு !

தென்றலுடன் கவிப்பேசும்
கருங்கூந்தல்..
அழகு !

அழகுகளால் ஆர்ப்பரிக்கும்
ஆழ்கடலே..!
ஏனோ ?!
அற்பமாய் நதியுடன்
சங்கமிக்கிறாய்..!

நயமுடன் நதியாய்
வழிந்தோடும் எனை
பெண்மையின் பெருங்கடலாய்
ஆட்கொள்கிறாய்..!

ஏனோ.?!
நதியாய் என்னுடன்
உறவாட மறுக்கிறாய்..!

எழுதியவர் : மகா (27-Nov-10, 11:54 am)
சேர்த்தது : maharajan
பார்வை : 463

மேலே