செவ்விதழ் சீமாட்டி

ஈரம்தோய்ந்த இதழ்கள்
மெதுவாக வருடி..
இதமாக இதழ்பதித்தேன் !

ஆசைப்பெருக்கெட..
விரலிடை அரவணைத்தேன் !

வில்லேந்திய காவலன்..
கணப்பொழுதில் கடமையாற்ற
இதழ்சிகப்பு என்விரல்களில்..

ஆம் !
செங்குருதி மெல்லச்சிரித்தது !

விரல் பற்றியவள்..
மெதுவாக வருடி
இதமாக இதழ்பதித்தாள் !

இரண்டற கலந்தது..
அவளுடன் என் குருதி..

நன்றி சொன்னேன்
காவலனாம் முள்ளிற்கு !

வெட்கம் மெல்லத்தழுவ
நிலம் நோக்கினாள்
செவ்விதழ் சீமாட்டி !

எழுதியவர் : மகா (27-Nov-10, 12:18 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 384

மேலே