இரு நிலை வாழ்க்கை
வாழ்க்கை என்பதே இரு நிலைதான்
மேடும் பள்ளமாய் இரு வழிச்சாலை
கசப்பும் இனிப்புமாய் இருசுவை உணவு
லாபம் நட்டமாய் இரு வகை முடிவு
நல்லது கெட்டதென இரு புறங்கள்
சோகம் சுகமென இரு உணர்வுகள்
இன்பம் துன்பமென இரு பக்கங்கள்
மகிழ்வு துக்கமென இரு நிலைகள்
நண்பன் விரோதியென இரு உறவுகள்
ஏழை பணக்காரன் என இரு சாதிகள்
கற்றவன் கற்காதவன் என இரு நிலைகள்
உண்மை பொய்யென இரு முனைகள்
ஏற்றம் இறக்கம் என இரு நிலைமைகள் !
குறையும் நிறையும் இரு மனங்கள்
மாறி மாறி வரும் நிலைகள் இரண்டும்
தேடி தேடி வரும் நல்லதே என்றும் !

