.................கடந்துபோ..............

இடர்பாடுகளும் தொடர் தோல்விகளும்,
தடைகள்தானென்று மௌனிக்காதே !
மனமே !!
எழுந்துபோ கடந்துபோ,
நிற்காமல் நடந்துபோ !
அங்கே சலனமில்லா அலைகளின்,
சங்கீதக் கடற்கரை காத்திருக்கும் !
சங்கமமாகி உனைக்கரை அதில் !
உன் போராட்டங்களெல்லாம் சீராட்டப்படும் அதில் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Apr-13, 7:27 pm)
பார்வை : 84

மேலே