உதிரம் குடித்த பொய்கள் !

விண்னை முட்டிய சோகங்கள்
மண்ணில் வென்ற கனவுகள்
கண்ணில் வாழ்ந்த காட்சிகள்.

நம்மில் வாழும் உறவுகள்
வார்த்தையால் வந்த பேதங்கள்
உயிரில் கலந்த உண்மைகள்.

உதிரம் குடித்த பொய்கள்
நிரந்தரம் என தேடும் துணைகள்
இடையில் மலர்ந்த வழித்துணைகள்.

இன்பத்தால் விளைந்த லாபங்கள்
துன்பத்தால் கண்ட இழப்புகள்
அன்பால் வென்ற மனங்கள்.

அச்சத்தால் பறிபோன வெற்றிகள்...
சொல்லும் செயலும் நாமாயிருந்தால்
பொருளில் பொருளிருக்கும்.

வாழ்க்கை வழியில்
நீயா நானா கேள்வி எழுந்தால்
வாழ்வே பொய்யாகும்.

கனவு வாழ்வைத் தேடியலைந்தால்
கசப்பே எஞ்சி வாழும்.

எழுதியவர் : sankarsasi (20-Apr-13, 8:07 pm)
பார்வை : 119

மேலே