இந்த பூக்கள் விற்பனைக்கே..

கற்பனைகளை விதைத்து
எண்ண நீரூற்றி வளர்த்து
நற்பண்புகளால் காவல்காத்து
நன்மைகளின் ஒளிபடர
வார்த்தைகளின் உரம்சேர்த்து
பூச்செடிகளை வளர்க்கிறேன்
மனத்தோட்டத்தில்..

ஒவ்வொரு செடிகளிலும்
உணர்வுகள் பூவாக பூக்கும்
சிலபூக்கள் அன்றாடம் பூக்கும்
சிலபூக்கள் அரிதாக பூக்கும்
தினம் தினம் மனமாகபூக்கும்
உதிர்ந்துவிடும் பூக்கள்தான்

மாலையாக்கி மகிழ்ந்திடுவேன்
சில பொழுதுகளில்..
கோர்வையாக்கி பார்த்திடுவேன்
சில வேளைகளில்..
கொட்டிவைத்து இரசித்திடுவேன்
சில தருணங்களில்..

அன்புகொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்
பண்புகொடுத்து பறித்துக்கொள்ளுங்கள்
நட்புகொடுத்து எடுத்துச்செல்லுங்கள்
இந்த பூக்கள் விற்பனைக்கே...

எழுதியவர் : எழுத்து சூறாவளி (21-Apr-13, 8:01 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 99

மேலே