எதைக் கடக்கிறாய்?
சாலையைக் கடக்கிறாயா--உன்
சரித்திரத்தைக் கடக்கிறாயா?
எதைக் கடந்தாலும் வரும்
எமனையும் பார்த்துக்கட!
அபாயங்களோடுதான்-----நாம்
அன்றாடம் வாழ்கிறோம்.
வெளியில் போனால் வீடு
வருவது உறுதியில்லை!
கவனமுடன் வாழ்ந்தால்----நமது
கணக்குத் தீரும் வரை
கட்டாயம் வாழலாம்,
கடமைகளும் முடிக்கலாம்.
கல்லறை வரைக்கும்----யாரும்
கனவுகளைச் சுமக்காதீர்.
உள்ளபோது முடித்தாலே
உயிருக்கு விடுதலை!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.