மலரும் புன்னகை!..

நேற்றைய புன்னகைகள்
இன்றைய வானில்
நாளைய புன்னகைகள்
இன்றைய செயலில்

நமக்கான இன்பங்கள்
எவர்கையிலும் இல்லை
நமக்கான துன்பங்கள்
எவராலும் இல்லை

நேற்று கொடுத்தது
இன்று கிடைக்கிறது
இன்று கொடுப்பது
நாளை கிடைக்கப்போகிறது

மகிழ்சிகளை பரப்பி
மகிழ்ந்து வாழ்ந்திடலாம்
துன்பங்களை பரப்பவேண்டாம்
துன்பங்கள் பரவுவது இயல்பு

இன்பங்களை தேடுவதே
வாழ்வின் இயல்பு
துன்பங்களை தவிடுபொடியாக்குவோம்
எல்லோரோடும் கரம்கோர்த்து

இன்பங்களின் எழுச்சிகண்டு
துன்பங்கள் துவண்டுபோகட்டும்
இன்பங்களை கொண்டாடுவோம்
எவரையும் இம்சிக்காமல்..

எழுதியவர் : எழுத்து சூறாவளி (21-Apr-13, 7:17 am)
பார்வை : 106

மேலே