........2100 இல் இந்தியா..........

விமானத்தில் இலவச
பாஸ் கேட்டு - பள்ளி
மாணவர்கள் மறியல்
தினமும் போய் வர

டைம் பாசுக்கு
தினமும் ஜப்பான்தான்
போய் வராங்க
தினசரி மார்கட்டுன்னு சொல்லிட்டு

புதன் கிரகத்தில்
நிச்ச்யதாதார்தம் முடிச்சி
வியாழன்ல முகூர்த்தமாம்
வெள்ளிக்கு மறுவீடாம்

அங்கிள் தினமும்
வாக்கிங் போறது
அயன் மண்டலத்தில்
போட்ட அட்மாஸ்பியர் ரோடு தான்

சூரியன் வரைக்கும்
சுருதி மாறாமல்
கேட்குமாம் ...
சூரியன் எப் எம் ( FM)

எழுதியவர் : நெல்லை பாரதி (21-Apr-13, 3:01 pm)
பார்வை : 112

மேலே