உன் ஒட்டைப்பாத்திரம் ஒழுகாதோ...?
குறள் தந்த கவிதை-11
அடமழையாய்
நீ வரவேண்டாம்
அடிக்கும்
அக்னி வெயிலுக்கு
அட..மழை மேகமே!
உன் ஒட்டைப்பாத்திரம்
ஒழுகாதோ...?
சொட்டு சொட்டாக
ஒரு துளியேனும்
என் வாயில் வீழாதோ..?
அமுதாக இனிக்காதோ...?
..............பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள்-11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

