கல் பேசும் கவிதை:- இடம்:- பொன்னி நதி கரை

கல் பேசும் கவிதை:- இடம்:- பொன்னி நதி கரை

கல் எண் 1 (செல்லம்மா):-

நினைவு தெரிந்த நாள்முதலாய்
நம் கட்டுடல் தழுவி செல்லா
புதுப்புனல் ஒன்றை யுரைப்பாயா
பொன்னக்கா நீயும் எனக்கு சொல்லக்கா!!!

கல் எண் 2 (பொன்னக்கா):-

கரிகாற் சோழன் காலந் தொட்டு
காவிரியில் வந்த புனல் - நம்
உடல் நனைத்து போகா நாளில்லை செல்லம்மா
புதுப்புனல் தன்னை கர்நாடகம் தடுத்தம்மா!!!

கல் எண் 1 (செல்லம்மா):-

கண்வாய் காய்ந்திருக்க கலங்கி நாமிருக்க
கண் வாயுள்ள தமிழன் தண்ணீர் கேட்கலையா
கலகம் தான் செய்யலையா
பொன்னக்கா கலக்கம் தான் கொள்ளலையோ!!!

கல் எண் 2 (பொன்னக்கா):-

தானா ஓடும் இயற்கையை
வீம்பாய் கர்நாடகம் தடுத்திருக்க – தமிழ் நாட்டின்
நெற் களஞ்சியம் கருகுதம்மா செல்லம்மா
பாழாய் போன அரசியல் அதில் கும்மாளம் போடுதம்மா!!!

கல் எண் 1 (செல்லம்மா):-

வயசுக்கு வந்ததும், முதிர்ந்ததும், வராததும்
ஆடி பதிணெட்டில் குளிக்கும் ஆனந்தம்
மீண்டும் வரும்மா மகிழ்ச்சியை தரும்மா
பொன்னக்கா நீயும் எனக்கு சொல்லக்கா!!!

கல் எண் 2 (பொன்னக்கா):-

மணல் துகள்கள் யெல்லாம் வரிந்து கட்டி
மறியல் செய்தாலும், கரையெல்லாம் ஒன்றுகூடி
கண்ணீர் விட்டாலும் கர்நாடகம் கலங்காதம்மா
செல்லம்மா மதகு கதவு திறக்கதம்மா!!!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்.

எழுதியவர் : ரா.சிவகுமார். (21-Apr-13, 8:29 pm)
பார்வை : 110

மேலே