தனிமை
அன்று நான்...
தனியாய் இருந்தேன்
தாயாய் வந்தாய்
தனிமை தீர்த்தாய்
இன்று நீ...
தவிர்த்து விட்டாய்
தவிக்க வைத்தாய்
தனிமையில் தள்ளினாய்
ஏன் வந்தாய் அன்று....?
ஏன் சென்றாய் இன்று...?
என நினைத்து ஏங்க வைக்கின்றாயே.....!
தவிர்க்க முடியவில்லை தவிக்கிறேன்
எவருமில்லை ஏங்குகிறேன்
என்னை தொலைக்கிறேன்....!