அம்மா!!! நினைவே இல்லையா உனக்கு
என் இரகசியங்கள்
தெரிந்து வைத்திருக்கிறாய்...
பலவீனத்தை நினைத்து
நான் உருகும் வேளையில்
பலத்தை எடுத்து காட்டுகிறாய்...
தவறாமல் என் தவறெல்லாம்
தள்ளி விட்டு என்னை ஏற்கிறாய்...
பெரும்பாலும் அசௌகரியமே
அளித்திருக்கிறேன்- அவை
நினைவே இல்லையா? உனக்கு...