நாளும்தான் மழை பெய்யுமே!
குறள் தந்த கவிதை-14
அண்டா குண்டாவில்
அமர்ந்திருந்து
ஆயிரம் மந்திரங்கள்
அழகாய் சொன்னாலும்...
அங்கே வராத மழை
அய்யன் வள்ளுவரின்
வான்சிறப்புக் குறளில்...
மூன்றுதான் படித்தேன்...
சென்னையில் இன்று...
முற்பகல் மழை
அடித்த வெயிலுக்கு
நகரத்து மரங்கள் போல்
நானும் நனைந்தேன்
இதயம் வரை குளிர்ந்தது
அய்யா வள்ளுவரே!
நீவீர் தெய்வப்புலவர்
அறிந்துகொண்டேன்..
நீரின்றி வாடும் உழவர்களே!
நீவீர் கலங்க வேண்டாம்
ஆளுக்கொரு திருக்குறளை
கைகளில் எடுங்கள்
ஆகாயத்தைப் பார்த்து
அதிகாரம் வான்சிறப்பை
நம்பிக்கையோடு பாடுங்கள்
நாளும்தான் மழை பெய்யுமே!
...........................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

