பிடித்ததில் பிடித்தது //காதல் துரோகியே//

என்
காதல் துரோகியே!
ஞாபகமிருக்கிறதா
அந்த நாட்கள்...

கல்லுரி வாசலில்
என் வருகைக்காக
தவமிருந்தாய்!

நான்
கால் பதித்த
சுவடுகளையெல்லாம்
காதலின்
'கல்வெட்டு' என்றாய்!

என்
கவிதைக்களுக்கு நீயே
கருவென்று சென்னாய்!

'உன் பேரழகு
எனை பைத்தியமாக்குகிறது' - என
நீ வர்ணித்த பொய்யான வார்த்தைகளையும்
கண்ணாடி பார்க்கும்
பழக்கமிருந்தும் மெய்யென நம்பி விட்டேன்!

என்
பருவத்தை மிச்சமின்றி
பருகிய பின்...

'பத்தோடு பதினொண்ணு' -
என
வெற்றிக் களிப்பில்
கொக்கரித்ததாய் வீதியில்
பேசிக் கொண்டனர்!

பிரிவுத் துயரால்
பசலை நோய் கண்டு
பரிதவிப்பேன் என
நினைத்தாயா?

அடச்சீ...!

காலில் மிதிபட்ட
அசிங்கத்தை
கழுவி விடுவது போல...

உனக்காக ஒருமுறை
குளித்துவிட்டுப் போகிறேன்...!

எழுதியவர் : (29-Apr-13, 11:27 am)
பார்வை : 268

மேலே