படித்ததில் பிடித்தது... நினைப்பதெல்லாம்...

பூக்கள் தேடும் பொழுதுகளில்
வெறும் வாசத்தை மட்டுமே
நுகர்கிறேன்...
மயில்களை நாடும் சமயங்களில்
இறகுகள் மட்டுமே கிடைக்கின்றன...
வரங்களை வேண்டி தவமிருக்கையில்,
சாபங்களே பரிசாய்
பந்தி வைக்கப்படுகின்றன...
இதுபோன்று
பெரும்பாலான தருணங்களில்
என் விருப்புகளுக்கு
எதிர்மறைகளே நிகழ்கின்றன...
எனவே,
இப்போதெல்லாம்
நான் நேசிக்கிற விஷயங்களை
எண்ணுவதே இல்லை
குறிப்பாக உன்னை!

எழுதியவர் : தெரியாது (29-Apr-13, 12:57 pm)
பார்வை : 128

மேலே