என் காதல் என்னும் இதயசப்தம்
உன் காதல் கணத்திற்கும்
உன் மௌனத்திற்கும்
இடையே சிக்கி தவிக்கும் வார்த்தை போல
தவிக்கிறது என் காதல் வார்த்தை இன்றி
சொல்லிட துடித்து நிற்கும்
வார்த்தை வெடித்து விடும் நேரத்தில்
புஷ்வானமாய் போகிறது
உன் மைவிழி அழகால்
உன்னால் எனக்கு வரும் மௌனத்தை
சப்தமாய் கொட்டி தீர்க்கிறேன் என் கவிதையாய்
வாசித்து பார்
கேட்கும் என் காதல் என்னும் இதயசப்தம்