வாழ்க்கை எனக்கும் வசமாகும்!

உனக்கு என் மடி
சொர்க்கபுரியாய் சொக்குகிறதோ;
மடியில் படுத்ததும்
தூங்கிப் போவாய்
நான் உன் முகம் பார்த்தவாறே
தலை தடவித் தடவி விடுவேன்
தூக்கம் உனக்கு பரிசான
அந்த கணமெல்லாம் -
வாழ்க்கை எனக்கும் வசமாகும்!

எழுதியவர் : sabari8787 (30-Apr-13, 7:29 am)
சேர்த்தது : sabari8787
பார்வை : 78

மேலே