உன் நினைவாய் பூக்கும்!!
உன் அழுக்கு ஆடை கழற்றி
நுகர்ந்துப் பார்ப்பேன்
நுகர்ந்து நுகர்ந்து
உன் வாசத்தை எல்லாம்
உயிர் முழுக்க சேமிப்பேன்
உனை விட்டு பிரிந்திருக்கும்
சிலநேரம்
உன் வாசத்தில் உயிரெல்லாம் மணக்கும்
நினைவுகள் உள்ளிருந்து உன் நினைவாய் எனக்குள்
நீயாகவே பூக்கும்!!