ஒரு தலையனைக் காகிதம் -தனஞ்சன்

எல்லா வரிகளும்
உச்சரித்தல் பொருள் கொடுக்கும்
இந்தக் காகிதத்தில்தான்
விம்மல்களில் பொருள் கிடைக்கும்

ஒவ்வொரு புத்தகமும்
எழுத்துக்களால் வசனமாக்கும்
இதில்மட்டும்தான் ஏதோ
திராவகத்தின் வாக்கியங்கள்

இரவின் பயணங்களில்;
படுக்கைக்குதிரை அந்த
திராவகத்தில்தன்
தாகம் தீர்க்கும்

தாகம் தணிந்த போதையிலே
அது சொல்கிறது

ஆசைகளின் பூவறுத்து
மண்ணில் பரப்பிவிடும்
இம்மவுசாம்ராஜ்யத்தில்
ஊமைகளுக்கு நீதியென்ன..... ?

வேதனை குளவிகளின்
பழுப்படைந்த கம்பிகளா?

இல்லை

சோதனை குழாயின்
சுகமற்ற உறவின்
கருப்போன்ற சுமையா?

என்
மனசாட்சி அரசனின்
வெகுமான நீதியின்மேல்
மதிப்பிழந்து போனது நெஞ்சம்

நாளை வரும் விடியலில் ஏற்று
புதிதாய்
இன்னுமோர் யுத்தம்

நாம் தலையணைக் காகிதம்
படைப்பவரல்ல
புலமைச்சரித்திரம்
படிப்பவர்கள்

எழுதியவர் : தனஞ்சன் (30-Apr-13, 12:03 pm)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 106

மேலே