பொத்தி பொத்தி வளர்த்த பொண்ணு
ஆசைக்கு ஒரு பெண்
ஆஸ்திக்கு ஒரு ஆண் .............
வரம் வாங்கி பெத்த பிள்ளை
கண்ணுக்குள்ளே காத்து வளர்க்க
ஆசைப்பட்டதில் மிச்சமில்லே
அனைத்தும் வாங்கி கொடுத்ததனால் ........
அழகு மிகுந்த பதுமை அவள்
அன்பான பெண்ணவள்
காண்போரெல்லாம் கவருகின்ற
கனிவான பெண்ணவள் ...............
உலகம் தெரியா பிள்ளை அவள்
உழைக்க சென்ற பெண் அவள்
நினைத்ததையெல்லாம் படித்து முடித்து
சென்னையிலே பனி சேர்ந்தால் ..........
நாட்கள் மெல்ல அங்கே கழிய
காலன் அவன் காதலனாய்
ஒருதலையாய் காதல் கொண்டு
ஓயாமல் தொல்லைகள் கொடுக்க ...........
அறிவுரைகள் பல சொல்லியும்
அடங்காமல் அவன் போக
மனிதன் அவன் எமனாகி
மலர் அவளை கொள்ள முயன்றான் .........
பூத்திருந்த அழகு ரோஜா
தீப்பற்றி கருகியதைப்போல்
அமில வீச்சில் கருகிப்போனால்
அலறி துடித்தால் வலி பொறுக்காது .........
மருத்துவமனைகள் பலபோகியும்
மரணம் அவளை மெல்ல தின்ன
துடித்த அவள் அடங்கிப்போனாள்
விருப்பமில்லாமல் உயிர்துறந்தால் ...........
இந்த நிலை இனியும் வேண்டாம்
வெந்து போனது அவளின் மனமும் உடலும்
வாழ்வதற்கு பிறந்தவளை
சாவதற்கு விட்டோமே .........
எவர் மனதையும் துன்புறுத்தும்
இழுவுநிலை நம்மில் வந்தால்
ஒழுக்கம் மறந்து உயிரை கொள்ளும் வன்முறையே வாழ்க்கையாகும் ............
வன்முறையே வாழ்க்கையில்லை
வன்முறையால் வெற்றியும் இல்லை
நம்மைப்போல் அவரையும் பாவித்து
நலம் பல செய்வோம் ........
தன்னலம் மறந்து பிறர் நலம் போற்றி
அவர் மனம் நாடும் நல்லதை செய்து
வம்பை மறந்து அன்பை வளர்த்து
மனிதத்தோடு வாழ்ந்து மனிதனாய் மடிவோம் ....