மானுடம் வாழட்டும் !
சாதியை வீட்டுக்குள்
வைத்துக் கொள்ளுங்கள்
சந்தணமாய் மணக்கும்
சாதியை வீதிக்கு
கொண்டு வர வேண்டாம்
சாக்கடையாய் நாறும்.
சாதி வீதிக்கு வந்தால்
சண்டை சச்சரவானால்
மானுடம் இங்கே சாகும்
நீலவானத்தில் சிறகு விரிக்கும்
வெள்ளைப் புறாவினைப் போல்
நெஞ்சில் நேசம் வளர்த்து
அன்பினில் அமைதியில் வாழ்வோம்.
----கவின் சாரலன்