அல்வாவும் வாழ்கையும்
எல்லாமே அவசரம் தான்
மாமியார் சொல்லி விட்டார்
நல்ல நாளாம் சுப வேளையில்
சிசெரியன் ...
தன்னாலே ஆய் போக தெரியலே
வாயிலே மம்மியும்
முதுகில் மூட்டையும்
PreKG
பதினாலு ஆகலை
முகத்தில் மீசையே அரும்பல
முகபுத்தகத்தில் முப்பது
கேர்ள் பிரண்டுகள்
பீபியாம் கோலோஸ்ற்றாலாம்
பேச்சிலே காணோம்
உடம்பிலே சக்கரையாம்
பொத்தானை அமுக்கி விட்டு
தூக்கி வருவதற்குள்
எரிச்சல் வந்திருக்கும்
அவசரமாய் சாப்பிட்டு
காகிதத்தில் கைதுடைத்து
ஓட்டமான ஓட்டம்
ஊரெங்கும் ஒரே கூட்டம்
ஒருநாள் கழிந்து விட்டால்
மரணத்தை
ஒருநாள் நெருங்கி விட்டோம்
அல்வா மட்டும் தானா
வாழ்கையும் ருசிக்கத்தான் ...
தொண்ட குழி தாண்டிவிட்டால்
அல்வாவும் ------- தான்