வாய்ப்பளித்த உறுப்பினருக்கு நன்றி
எனக்கு வந்த ஒரு தனிவிடுகையில், புதுவரவு உறுப்பினர் ஒருவர் எழுதிய பண்பான வார்த்தைகளை இங்கே அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வர ஆர்வம் கொள்கிறேன்.
-மன நோயாளியே ,உன் மனக் குழப்பம் எதற்கு என்னைப் பற்றி ?...உனது பல படைப்புகள வாசித்த பின் தான் இந்த விடுகை...உருப்படியாய் ஏதாவது உன் வாழ்வில் செய்ய முயற்சி செய்...இனியும் இம்மாதிரி எழுதாதே....
மிகவும் பண்பான வார்த்தைகள் வைத்து தனிவிடுகை, ஒரு அறிமுகமில்லா ஒரு நபருக்கு, எழுதும் அந்த நபரின் குணாதிசயத்தை பற்றிய ஒரு கருத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளவும்.
அதற்கு எனது பதிலுரை இப்படி அனுப்பபட்டது. இதோ கீழே......
மிக்க நன்றி அன்பரே பண்பான அறிவுரைக்கு.
என்னையும் மதித்து அனுப்பிய தனிவிடுகைக்கும் மிக்க நன்றிகள் அன்பரே
இனியும் அவ்வாறு எழுத மாட்டேன் நிச்சயமாக.
என்னை சரியான முறையில் வழி நடத்த அக்கறை கொள்வதற்கு மிக்க நன்றிகள்
என்னை சரியான முறையில் அடையாளம் கண்டு தங்களை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
உருப்படியான ஒன்றை யோசித்து கொண்டு இருக்கிறேன் சரியாக அகப்படவில்லை. வந்தால் முதலில் அனுமதி கேட்பேன் செய்யும் முன் தங்களிடம் நிச்சயமாக.
தொடர்வோம் தொடர்பை.
தங்கள் மீது என்றென்றும் உயர்ந்த மதிப்புடன்
பண்புடன் மங்காத்தா
இவர் வேறு யாரும் இல்லை நமது மதிப்பிற்குரிய புதிய உறுப்பினர் "வீரன்தாமரை"தான்.
மிகவும் மதிப்புக்குரிய ஒருவர்தான். இருப்பினும் தடுமாறிவிடுவது மனித இயற்கை. என்ன செய்வது.
நான் இவரை அடையாளம் கண்டு கொண்டேன். உங்களுக்கு புரிந்ததா? தெரிந்தால் சொல்லுங்களேன் இந்த மங்காத்தாவிற்கு.........