நகர (நரக )மயமாக்கல்

பசுமை போர்த்திய புல்வெளியும்
நீர் ஓடும் வாய்க்காலும்
நிலமெல்லாம் விளை நெல்லும்
வீசுகின்ற குளிர் காட்டும் .........

சாலையோர மரங்களும்
மரம் தரும் நிழலும்
மணம் கலந்த மண் வாசனையும்
சோறு போடும் சேற்று வேலையும் ...........

வானம் தொடும் மலையும்
மலையை ஒட்டிய வனமும்
வனத்தில் வாழ்ந்த விலங்கும்
காட்டுவாசி மக்களும் ..........

மாமரத்து குயில் பாட்டும்
தோகை விரிக்கும் மயிலினமும்
மணப்பாறை காளைகளும்
உழுது காத்திருக்கும் நிலமும் ...............

வியர்வை சிந்தும் விவசாயியும்
உயர்வு தரும் விவசாயமும்
செழுமை தந்த விளை நிலங்கள் எல்லாம்
இன்று ?

நகர மயமாக்கலாம்
இது நரக மயமாக்கலா ........

கல்லுடைக்கும் குவாரிகள்
பெருத்து போச்சு
மலைகள் குறைந்து
மடுவாய் போச்சு...............

காடுகள் அழிந்து
நாடுகள் ஆச்சு
மழையும் குறைந்து
வறட்சி வந்தாச்சு ..............

விளைந்த பூமியெல்லாம்
மனைகளாய் போச்சு
பசுமையாய் இருந்த இடம்
பாலைவனமாய் ஆச்சு ...............

ஏரியும் குலமும்
இடம் தெரியாமல் போக
குடி நீரை தேக்க
இடமில்லாமல் போச்சு .....

நிழலை கொடுத்த
மரங்களை எல்லாம்
நெடுஞ்சாலை பாதை
இரையாக்கி போச்சு ...............

நாற்றும் சேரும்
ஊறிய நிலத்தில்
கம்பியும் சிமெண்டும் கலந்து
கட்டிடமாய் ஆச்சு .............

மணப்பாறை மாடு
கறிக்கடைக்கு போச்சு
விவசாயி பாடு
விளங்காமல் போச்சு ...........

இப்படியே போனால்
என்ன ஆவது
உணவுக்கு வழிதேடி
எங்கு போவது ...........

நகர மயமாக்கல்
இது நரக மயமாக்கல்
மனிதனை ஏமாற்றும்
இந்து மந்திர மயமாக்கல் .................

எழுதியவர் : பன்பரசி (5-May-13, 1:49 pm)
பார்வை : 99

மேலே