சில நேரங்களில் நானுன் என் கவிதையும்
கருப்பொருள் நிறைந்திருந்தும்
கருத்தில் தெளிவிருந்தும்
அற்புத கருத்திருந்தும்
அழகான வரிகள் இருந்தும் ...............
சமூக சிந்தனை இருந்தும்
நல்லொழுக்க போதனை இருந்தும்
எதுகை மோனைகள் நிறைந்திருந்தும்
எல்லோருக்கும் பொருந்தும் அறிவுரை இருந்தும்..
வாழ்வை விளக்கும் வரி இருந்தும்
இயற்கையை போற்றும் பதம் இருந்தும்
ஒற்றுமை போதிக்கும் உணர்விருந்தும்
நட்பை போற்றும் தோழமை இருந்தும் ...........
ஜாதியை ஒழிக்கும் புரட்சி இருந்தும்
சாமியை போற்றும் பக்தி இருந்தும்
அனைவரையும் மதிக்கும் கொள்கை இருந்தும்
தமிழ் கவிதை என்கிற அந்தஸ்து இருந்தும் .........
ஓர் நாள் ,
என் கவிதையும் ,
என்னைப்போலவே இறுதி பயணத்தில்
இருவரும் "ஓர் நாள் மக்கி மன்னாவோம் "?