தர்மமும் கர்மமும் !

பொட்டியிலே பூட்டி வைத்த
பணம்..!
கல்லறைப் பெட்டியிலே போட்டு வைத்த
பிணம்.!
பிறருக்குப் பொருள் தந்து உதவும்
மனம்.!
நீ சென்றாலும் உன் புகழ் காக்கும்
குணம்.!


பணம் சேர்க்க வாழ்வது தான்
வாழ்வா.?
பொருள் சேர்த்துப் பூட்டியபின்
சாவா.?


வாழும் போதே செய்திடு
தர்மம்.!
போகும் முன்னே தீர்ந்திடும்
கர்மம்.!

கொடுக்கத்தானே படைப்பினில்
செல்வம்.!
கொடுத்து முடித்தே இறைவனிடம்
செல்வோம்.!

எழுதியவர் : செந்தமிழன் பாலா (9-May-13, 5:32 pm)
பார்வை : 128

மேலே