அன்னை ஓர் ஆலயம் அன்னையர் தினம் சமர்பணம்

சுமந்தால் ஒரு பத்து திங்கள்
சுகமான சுமையாய் உன்னை

சந்தித்தால் ஏத்தனையோ இன்னல்
தாங்கினால் உன்னை மண்ணில் தர

மருத்துவர் தினம் தரும் அறிவுரை
மறுக்காது மருந்து உண்டால் உனக்கு

குடும்ப வாரிசாக எண்ணி உன்னை
அவள் வாழ்கையே நீயே என்று

உன் நிகழ் காலம் அவளுக்காக
அவள் எதிர் காலம் எண்ணவில்லை

அவள் வாழ்க்கையின் பரிமாணங்கள்
உன் உயர்வும் , வாழ்வும்

இறைவன் தந்த உன் வாழ்க்கை
உன் அன்னை தந்த மாறாத அன்பு

உன் இதயத்தில் இனி அன்னை
"ஆலயமாக " அவள் இறுதி மூச்சு வரை .....

-ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை .காதர் . (12-May-13, 5:13 pm)
பார்வை : 215

மேலே