நிழற்படச் சேகர ஏடு (Photo Album)
நிழற்படச் சேகர ஏடு
பழைய கால நினைவலைகள்!
தூசு படிந்து மங்கலாய்த் தெரிகிறது
பாசத்துடன் தடவிப் பார்க்கிறேன்!
இளமையான என் அம்மா அன்று
இன்று முதுமையில் நரையோடி!
களிறனைய என் அப்பா
நெஞ்சைத் தூக்கியபடி அன்று!
பஞ்சு போன்ற தாடி முடியுடன்
கண்ணில் ஒளியின்றி இன்று!
காலத்தின் கோலம் - பின்னோக்கி
எண்ணிப் பார்க்கிறேன்!
கண்கள் கலங்குகிறது
கண்ணீர் பெருகுகிறது!

