"ஆமைகளை கண்டறிவோம் (2)"

பேண வேண்டிய ஆமைகள்
-----------------------------------------
தன்மதிப்பை மெருகூட்ட தாழ்ந்தவரின்
துணைதேடி அலையாமை....................

தேவையிடத்தில் தன்திறமை நிருபித்து
தன் பங்கிற்கு வெல்லாமை..................

தனது ஓட்டத்தின் தேடுதல் முடிந்ததாக
எண்ணி ஓரிடத்தில் நில்லாமை ..................

உயிர்வாழ உண்டு மகிழ்வதைவிட்டு
நாவின் ருசிக்காக உண்ணாமை ............

பொதுபொருளை தன்சொத்தாக நினையாமல்
வீரத்திற்கு கோஷமாக சேதபடுத்தாமை ........

வாழ்ந்து சிகரம் தொட்டவரின் புகழை
தன்கொடு அறிவால் அழிக்காமை............

பகுத்தறிந்து சொல்பவர்களிடம் சரிக்குசமமாக
நின்று தர்க்கம் புரியாமை...........................

உண்மையை உலகிற்கு உணர்த்தியவரை
தன்சினத்தால் கடியாமை..............................

நியாயத்திற்கு தன்பெண்டு தன்பிள்ளை
எனகொண்டு பார்க்காமை ....................

தன்கடமை தவித்துகிடக்க பிறகென்று
பிதற்றி கொண்டு உறங்காமை .....................

தனக்கான வேலையை தகுதியை காண்பித்து
அடுத்தவரின் பார்வைக்கு தள்ளாமை...........

பிறர்மீது வெறுப்பால் தன் குழந்தையை
தவறாக கருத்தி பேணாமை ....................

அழையாத வீட்டிற்கு உரிமையுள்ள விருந்தாளியாய் உறவாடி செல்லாமை ...........

தன்ருசிக்காக மற்றொரு உயிரை துச்சமாக்கி
தனக்கென்று கொல்லாமை ...............

தவறென்று தெரிந்தும் தீயசெய்தியை
நியாயபடுத்தி உரைக்காமை...................

தீய செயலில் ஈடுபடுவோரை உறவென்று
உண்மையை உலகிற்கு காட்டாமை ..................

கெட்டவழி சென்று தான்கொண்ட
நல்ல நினைவுகளை தூக்கி போடாமை ..........

எட்டிவிட்டோம் என்று இறுமாப்புகொண்டு
ஏறிவருவோரை எட்டி மிதிக்காமை..................

தன்னை அழிக்கவரும் அம்பென்று தெரிந்தும்
அஞ்சி நடுங்கி ஓடாமை .........................

பிறரின் செயல்கள் நம்மை அழித்துவிடும்
என்று தரம்தாழ்த்தி நடுங்காமை .........


ஒழிக்க வேண்டிய ஆமைகள்
------------------------------------------

இழிகுலம் என்று இங்கிதமற்று
மனிதனை வகைபடுத்தும் தீண்டாமை........

நல்ல பலநூல்கள் இருக்க தவறுக்கு
தளமமைக்கும் நூல்களை படிக்காமை ..........

தானுண்டு தன்தேவைபோக எஞ்சுவதை
சிற்றினத்திற்க்கு அளிக்காமை ..........................

வெற்றி வீடு நோக்கி நடைபயிலும் என்று முன்னேற்ற பாதைக்கு முயலாமை..............


ஆமைகளை தரம்பிரிப்போம்
ஒவ்வாமைகளை உதறித்தள்ளுவோம்
வஞ்சனையும் ஒழியும் .....வாழ்வும் சிறக்கும் ...

எழுதியவர் : bhanukl (14-May-13, 3:22 pm)
பார்வை : 165

மேலே