நம்பிக்கை வார்த்தை ...!!!

சுவரில் கிறுக்காதே ....
விளையாடும் குழந்தைகளின் ...
தாயின்- தடித்த வார்த்தை ..!!!

கிறுக்கட்டும் விட்டுவிடு .....
தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!

பல ஆயிரம் கொடுத்து ...
வர்ணம்பூசிய சுவர் -அவளின் ...
ஏக்கவார்த்தை...!!!

உனக்கு தெரியுமா ....???
இன்று நவீன சித்திரம் என்று ...
கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...

யார் கண்டது கண்ணே ...
எதிர்காலத்தில் நவீன ஓவியன் ...
நம்வீட்டில்.....???
நம்பிக்கை வார்த்தை ...!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (14-May-13, 3:29 pm)
பார்வை : 146

மேலே