சுதந்திரத்தை பற்றி ...

சுதந்திரத்தை பற்றி ...
கவிதை எழுதிக்கொண்டிருந்தேன் ...
முற்றத்தில் வந்து விழுந்த்தது ...
காகங்களால் கொத்தப்பட்ட ...
குருவியொன்று ....!!!

எடுத்த குருவியை ...
மெதுவாக வருடி ...
முடிந்தளவு பாதுகாத்து ...
பறக்கவிட ஆயத்தப்படுத்தினேன் ...
வேண்டாமப்பா ..நிறுத்துங்க ..
அதை கூட்டில் வளர்ப்போம் ..
தடுத்தான் செல்ல மகன் ...!!!

வேண்டாம் மகனே ...
அதன் சுதந்திரத்தை பறிக்க கூடாது ..
பறக்க விட்டேன் குருவியை ..!!!

வாடா மகனே ....
வெளியில் நிற்காதே ...
பொல்லாத உலகமடா இது ...
கூறியபடி மகனை அடைத்தேன் வீட்டுக்குள் ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (14-May-13, 3:42 pm)
பார்வை : 84

மேலே