போனதும்.,..

நிலை
கொள்ளுமோ
உன் நாடோடி
கூடாரம்,

நீ.
எனக்கு
பூசிப்பார்கும்
அரிதாரம் என்ன?

பாவியா?
பரிதாபகரனா?
எச்சமா?
துச்சமா?

அடுத்த ஊர்,
அடுத்த உறவு,
அடுத்த பயணம்,
அறுத்த உறவு
மனம் எண்ணுமோ!!

இடம் மாற
தடம் பதித்த
தடயம்,
குருடனின்
யானை
தடவுதலாய்,

இன்னும்
மூடப்படாமல்
ஈரமாய் இருக்கிறது
உருவிச்சென்ற
பள்ளமான
உள்ளம்,

இருந்த
இடம்,
இரக்கப்படும்,
இறக்கப்படும்வரை,

எழுதியவர் : சபீரம் sabeera (15-May-13, 2:52 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 62

மேலே