என்னவளே!

ஆணவம் எனும் ஆதங்கத்தை
அறவோடு பிடிங்கிட்ட சின்ன தேவதையே!
கனம் ஒன்று வேண்டுகிறேன்
உன்னாக நானிருந்து
உன்னவனிடம் அன்புகொள்ள.
எப்படி முடிகிறது உன்னால்
இந்த பொறுமை நிறைந்த குணம் கொள்ள
என் நற் குணம் குடிகொண்ட நன் மகளே!
அணைக்க வேண்டும் உன்னை
கபடமில்லா அன்புக் கரம் கொண்டு
நினைக்க வேண்டும் உன்னை
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்டு.
நனைந்து நிற்கின்றன
என் கண்கள்- உன்
சிவந்த மூக்கின் நுனியை எண்ணி.
என்ன தவம் செய்துவிட்டேன்
உன்னை அவன் அருளாய்
நான் அடைந்த்ததற்கு.....!