(18)தந்திர காட்டில் நான் (3) குகை நோக்கிய பயணம்

(3) குகை நோக்கிய பயணம்

===========(தொடர்ச்சி )=============

அதோ அந்த

பறவைகள் பற்றுக்கள் இல்லாததால்
பறக்கிறதோ -சுதந்திரத்தை சுவைப்பதால்
இன்னிசையால் சிரிக்கிறதோ !!!

இனிமையின் கிரக்கம் .....
இம்மதுபானம் இயற்கைக்கு
சொந்தமானது -துளியும்
விஷமில்லாமல் இருப்பதால்
பச்சிளம் பாற்கடலே
இக்காட்டினில் தெரிகிறது !!!!

மாயத்திரைகள் இங்கு இல்லை
ஒப்பனைகள் எங்கும் இல்லை
நாகரீகம் என்ற பெயர்களால்
தனித்துவத்தை இழந்த பூவையும்
பூமிதமரும் கரு நிற வண்டையும்
வேடிக்கையிடும் முகிலின் போக்கையும்
வேதனை நிரம்பிய வாடையையும்
இக்காட்டினில் காணவில்லை ......

இதயத்தை எப்போதும் திறந்தே
வைத்திருக்கும் காட்டுக்குள்
நுழைந்து எங்கோ சென்றுகொண்டிருக்கிறேன் ........
கலாச்சாரத்தை தாண்டி
நாகரீகத்தை தாண்டி- பல மயில்
தூரம் நான் வந்துவிட்டேன் ..........
வழிநடத்துவது அன்புதான்.....

போலித்தனமும் ,போட்டியும்
கடமைக்கு வாழ்வதும்
ஒற்றுமையில்லா வஞ்சனையும்
இடத்திற்கு இடம் இரண்டாயிரம்
பிரிவினையும் -
அரசியல், சமத்துவம் ,இரக்கம்
என்ற பெயர்களால்
முதலாளித்துவமும்......
உயிரோட்டம் இல்லாமல்
நடமாடும் பிணமாக
பின் இவ்வுடலையும்
இழுத்து இடுகாட்டில் இடவா
இப்பிறப்பு அப்பப்பா போதும் போதும்.....

சுதந்திரத்தை தடுக்கும் சுயநலகும்பல்களின்
உயிரில்லா நாகரீகம் இருந்தென்ன
இறந்தென்ன .......

என்னை அணைக்கும் அன்பு
என்னை அணைக்கும் பண்பு
என்னை அணைக்கும் ஜீவன்
என்னை அணைக்கும் சக்தி
இங்குதான் இங்குதான்

தேடிச் செல்கிறேன்
தேடாமல் தேடுகிறேன்
அலையாமல் அலைகிறேன்
சுகத்தோடுதான்
சுமையாக நினைத்து அல்ல .......

விரைவில் கண்டடைவேன்.....
ஏனெனில் நான்
தேடுகிறேன் ........
உயிரோட்டம் உள்ள
தவிப்போடும்
தாகத்தோடும் .......

===========(தொடரும் )=============

அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (16-May-13, 9:20 pm)
பார்வை : 166

மேலே