என் தந்தை

வீர வம்சத்து வீரனிவன்
கண்ணில் கண்ணீரும் வந்தது
என் கண்ணில் கசிந்த நீர் துளி கண்டதால்,
தன் கையில் என்னை இருபது
வருடங்களாய் தாங்குபவர் ,
தன் தன்மானம் அதனை கூட
பிள்ளை நிலா இவளின் முகம் காண
மறந்தவர் ,
மேல் அதிகாரி கூட பணிந்துவிடுவர்
இவருக்கு
ஆனால் என் முக சுனுக்கமே
உருக்கிவிடும் எந்தையை ,
பாசமதனை அதிகம் வைத்துவிட்டதால்
என்றும் இப்பெண்ணின் மடமை எல்லாம்
இவருக்கு குழந்தைத்தனம் ஆனது
சிறு கிறுக்கல் கூட பெருமை என்றானது
என்றும் எனக்காக வாழும் ஈருயிரில்
ஓருயிர் என்தந்தை
நான் கண்ட அதிசய நாயகன் எந்தை அல்லவா

எழுதியவர் : தர்ஷிகா (16-May-13, 9:13 pm)
Tanglish : en thanthai
பார்வை : 91

மேலே