சோறு இருந்தும் உண்ணமுடியாமல்
முள்ளிவாய்க்காலில் கொடூர மனிதப் பேரழிவு நடந்தேறி நான்கு வருடங்கள் ஆகியும் யுத்த காலத்தில் காயமடைந்து ,ஊனமடைந்து உணவே அருந்த முடியமால் ,வேலையே செய்ய முடியாமல் வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது கொடிய நிலையே .
பெற்றோர்களை இழந்த பிள்ளைகளும்,பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும்,கணவனை இழந்த மனைவிகளையும் ,மனைவிகளை இழந்த கணவன்மாரையும் என இழந்த இழந்த என்று இழக்கப்பட்ட மண்ணில் இன்னல்களே மக்களை சூழ்ந்திருக்கிறது .
2009ன் யுத்த காலத்தில் மக்கள் மீது ஏவப்பட்ட எறிகணைகளின் மிலேச்சதனங்களால் காயப்பட்டும், அநாதரவாக ஊனமாக்கப்பட்டு விடப்பட்டவர்களும் தங்கள் காயங்களுக்கு
மேலதிக சிகிச்சை செய்யக் கூட ஒரு வளியுமில்லாமல் தவிப்பதே தான் பெரும் கொடுமை .
புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத் தமிழர்கள், தாயகத்தில் பாதிக்கப்பட்டு உள்ள உறவுகளுக்கு உதவுவதை தங்களது தார்மீக கடமையாக செய்யும் பெரிய பொறுப்பு உங்களிடம் வரலாறு தந்திருக்கிறது என்பதனை பெருமிதத்தோடு தாங்கிக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம் .
வன்னியில் சொல்லமுடியாத துயரங்களை சுமந்த ,சுமந்து கொண்டிருக்கும் எமது உறவுகளில் ஒருவரான கனகலிங்கம் கலைவாணி வயது (35) என்கிற 2 பிள்ளைகளின் தாய் வட்டக்கச்சியிலிருந்து இடம்பெயர்ந்து சுதந்திரபுரத்தில் இருக்கும் போது பல்குழல் எறிகணைத் தாக்குதலில் தனது 12 வயது குழந்தையை இழந்தது மட்டுமின்றி இவரும் பெருத்த காயமடைந்துள்ளார்.அத்தோடு இவரது கணவனும் உடல் முழுதும் பெரும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தது என்று இலகுவாக சொல்லிவிடுவதை கலைவாணியின் காயத்தில் சொல்லமுடியாது ,வாயின் தாடைப்பகுதிகளை,பற்களை எல்லாம் நொருக்கி வாயின் தசைப்பகுதிகளை(சொக்கை) கிழித்தெறிந்திருக்கிறது.இவரின் இந்தக் காயத்தின் காரணத்தால் காயப்பட்ட நாளிலிருந்து இன்று வரை எந்த உணவு வகைகளையும் ஏன் ஒரு பிடி சோற்றைக் கூட சாப்பிட முடியாத துயரம் முள்ளிவாய்க்கால் கொடுமையை விட கொடுமையே .
நீராலான உணவு வகைகளையே தொடர்ந்து 4 வருடங்கள் சாப்பிட்டு வருகின்ற கனகலிங்கம் கலைவாணி தனது காயத்திற்கான சிகிச்சையை செய்ய இந்திய ரூபாய்க்கு
100,000 ஒரு இலட்சம் தேவைப்படுகிறது .
ஒரு பிடி சோறு கூட தனக்கெனவிருக்கும் வாயால் உண்ணமுடியாது தவிக்கும் இவருக்கு உதவுவதற்கு தமிழனாய் இருப்பதிலும் பார்க்க மனிதனாக சிந்தித்தால் உதவலாமே.
இவரின் கைபேசி எண்ணும் வங்கிக் கணக்கு இலக்கமும் கீழே உள்ளது .அத்தோடு அவரின் உதவி கோரும் குரல் வடிவமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது .
கைபேசி -0094-777205414
மக்கள் வங்கி கணக்கு இலக்கம் -109-2-001-5-0056148
கலைவாணியின் சகோதரர் கைபேசி இலக்கம்-9952955658 (சென்னை ,தமிழ்நாடு )
பெயர் -கோகுலன்
வங்கி கணக்கு இலக்கம் -31197162353
கிளை : பவானிசாகர்
வங்கி : ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா