இனியும் வேண்டாம் இக்கேடு!

ஒரு இளைஞனின் குமுறல்!
அர்த்தங்கள் பல தேடும்
பெருமை பிடித்த இவ்வுலகில்
தனிமையொன்றே தவமென்று
தனித்திருந்த மானிடன் நான்
தனிமையின் தனித்துவத்தை
உணரவந்த அவ்வேளை
என் இனியவளே உன்னை உணர்ந்தேன்
பெண்ணிற்குள்ளும் உள்ளது தனிமை
அதை தனித்திடும் வேளை
உன் மனத்திடம் கேட்டேன்.
அதற்கு ஈடாய் நீ கேட்டிட்டாய்
என் துர்க்குணத்தை
வெக்கித் தலைகுனிந்து
உன் அடிமேல் அடிவைத்து
வீடு சென்ற நேரம் அது
மனது நினைத்த துர்குணங்கள்
வீழ்படிவாய் வடிகட்டி விசிரியோடின.
காமத்தில் உள்ள புனிதமதை உணர்ந்தேன்
பக்தி எனும் உழிகொண்டு
திருமணமென்னும் சுத்தியால் அடித்துடைத்திட்டதால்.
இந்த புனிதமதை
உணர்ந்திட்ட ஆண்மகனாய்
என்போன்ற பாவிகளுக்கு
கூறுகிறேன் ஒரு மந்திரம்
அன்பு ஒன்றே அமைதி தரும்
அழிவில்லா உவகை தரும்!