மாயம் வேண்டும் மனம்

மாய குதிரை
பயணிக்கும்
மாய பாலைவனம்
ஒன்று
என் வீட்டு தோட்டத்தில்
முளைத்திருக்கிறது.......

யாரும்
தண்ணீர் பாய்ச்சி விடாமல்
பத்திரமாய்
பார்த்துக் கொள்கிறேன்...

சூடான சூறாவளி
அவ்வப் போது
அணைக்கிறது...
நானோ
துகள்களாய்
சிதறுகிறேன்

மாயத் தோற்றம் ஒன்று
மௌனமாய்
புன்னகைக்கிறது
மாயங்கள் வேண்டும்
மனதில்....

எழுதியவர் : கவிஜி (18-May-13, 8:41 pm)
Tanglish : maayam vENtum manam
பார்வை : 84

மேலே