என்ன செய்வது ...
வயதுக்கு வந்த
நாளிலிருந்து
அவன் சேர்த்து வைத்த
ஆசையையும்,
காதலையும் காட்ட,
தேவதையாய்
காதலி ஒருத்தியை தந்து
மணக்கும் தருணத்தில்
கல்யாண பரிசாய்,
இறைவன்
மரண நாளை அறிவித்தால்
அவன் மணப்பானா?
இல்லை மறுப்பானா?
அழுவானா?
இல்லை அனுபவிப்பானா?