கலவரங்கள்

என் விரல்கள்
செய்யும்
கலவரங்களை
தடுக்க
உன் கண்களால்
தடை
உத்தரவு போடுகிறாய்
கலவரம் எல்லை
மீறும் போது
உன் விரல்கள்
கொண்டு என் விரல்களை
சிறை பிடிக்கிறாய்
கலவரங்கள் தீவிரமாகின்றன!

எழுதியவர் : -நந்து- (23-May-13, 10:45 am)
சேர்த்தது : nandhukec
பார்வை : 69

மேலே