காத்திருப்பு

தேடுகிறேன்
திகதி கிழித்து
உன் பரிச்சையின்
இறுதிநாளை
எதிர்பார்த்து

வாடுகிறேன்
நீ வரும்வரை
விழியோரம்
நீர் வைத்து

ஏங்குகிறேன்
நித்தம்
நித்திரையில்
சத்தப்போடும்
கனவுகளை
பகலிலும்
ரசிப்பதற்காக

பாடுகிறேன்
என் சோகம் மறைக்க
உன் அழகினை
மாலையை கோர்த்து

அழுகின்றேன்
தலையணையுடன்
என் தவிப்புகளை
சொல்லி சொல்லி

பேசுகிறேன்
தனிமையில்
உன் குரல் போலாவது
பேசி மகிழ்வதற்காக

என் உயிர்
உறையும் வரை
என் விழிகள்
விழித்திருக்கும்
உன் வரவை பார்த்து

எழுதியவர் : பூவதி (24-May-13, 3:45 am)
சேர்த்தது : பூவதி
Tanglish : kaathiruppu
பார்வை : 154

மேலே