நிஜமென்னும் மாயமான்

கண்டதே காட்சியென்று
கணநேரம் அதிசயித்து
மறுகணம்
மறந்துபோவார் சிலர் ....

நிஜமென்று நம்பி
மாயம் துரத்தி
ஓடியதில் ஜெயித்து
தேடியதில் தோற்ற
இராமபிரானே
நல்ல உதாரணமென்று
துரத்தச் சோம்பி
வீழ்ந்தே கிடந்தார் வேறு சிலர்.....

தேடலே வாழ்க்கையென்று
தெளிந்த சிலர்
ஓடும்வரை ஓடி
கையில் பிடித்து வந்து
உலகிற்குச் சொன்னார்
'இதுதான் நிஜம்' என்று
ஆனாலும்,
உள்ளுக்குள் புழுங்குவார்
கண்டது நிஜம்தானொவென்று !

எழுதியவர் : மருத பாண்டியன் (24-May-13, 4:44 pm)
சேர்த்தது : maruthu pandian
பார்வை : 96

மேலே