அகரத்தில் மாற்றம் செய்வோம்

அழிவில்லா உலகம் செய்வோம்
ஆன்ற புலமை தன்னை பழகச் செய்வோம்
இடி தங்கும் இதயம் தன்னில்
ஈட்டி பாய்ந்தாலும் உழைத்தல் செய்வோம்
உழைத்தே பிழைத்தல் செய்வோம்
ஊர் மெச்சும் புகழை வெறுத்தல் செய்வோம்
எத்துணை பாடு பட்டாலும்
ஏணியாக நாம் நாட்டை ஏற்றல் செய்வோம்
ஐயம் தீர்த்தலும் செய்வோம்
ஒழுக்கம் கற்பித்தலும் செய்வோம்
ஓடம் போல தெளிவாய் நடத்தல் செய்வோம்
கல்வி எனும் ஔடதம் அனைவரும் அருந்தச் செய்வோம்!

எழுதியவர் : விவேக்பாரதி (24-May-13, 6:02 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 85

மேலே