அவளுக்காக ...

பைந்தமிழ் நெஞ்சம்
பாவம்தான்
பாவை நீ ஆங்கிலம்
கொஞ்சம் பேசயிலே..
புல்லாங்குழலின்
துளைகளிலே
காற்று நுழைந்தால்
சுகம்தானே
பூங்குழல் நீயும்
புன்னகித்தால்
அன்னையின்
அன்பு கிட்டாதோ??
இருளின் மடியில்
இருக்கையிலே
இமைகள் கொஞ்சம்
நாணாதோ
இருந்தும் உன்னிடம்
பேசாமலே
இமையின் தாகம்
தீராதோ
பூவிதழ் அடியில்
பனித்துளி படிந்தால்
கனக்கும் அகமும்
இனிக்காதோ??
தோழி நீயும்
தோள் கொடுத்தால்
தோல்வியும் நம்மிடம்
தோற்காதோ??
நம் எதிரிகளுக்கு
வேர்க்காத உதடும்
வேர்க்காதோ?

எழுதியவர் : kumaresan (24-May-13, 8:02 pm)
பார்வை : 174

மேலே